Bank Loan (வங்கி கடன்)

 

வங்கி கடன் என்பது ஒரு வியாபார நிறுவனத்திற்கோ அல்லது தனி நபருக்கோ வங்கி மூலம் வழங்கப்படும் கடன் தொகையின் அளவு ஆகும்.

Bank Loan (வங்கி கடன்):

வங்கி கடன் என்பது வங்கி அல்லது பிற நிதி நிறுவனத்திடமிருந்து கடன் தனிநபர் அல்லது வணிக நிறுவனம் வாங்கக்கூடிய மொத்த பணமாகும். வங்கியின் கடன் வழங்கும் அளவு, கடன் பெறுபவர் கடனை திருப்பி செலுத்தும் திறன் ஆகியவற்றை கொண்டு வங்கி கடனின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. கடன் பெறுவரின் சொத்து மதிப்பு, வருமானம், இதற்கு முன்பு கடன் பெற்றுள்ளாரா என்பதை கணக்கில்கொண்டு அவருக்கு கடன் வழங்கலாமா வேண்டாமா என்பதை வங்கிகள் முடிவு செய்கின்றன. ஒரு நபருக்கு கடன் வழங்கலாமா என்பதை முடிவு செய்வதில் கடன் பெறுபவர்களின் வருமானம் முக்கிய இடத்தை கொண்டுள்ளது. கடன் பெறுபவர்களின் மாத மொத்த வருமானம் மற்றும் அவர்கள் மாதம் செலுத்தும் கடன் தொகையின் அளவு ஆகியவற்றின் விகிதத்தின் அடிப்படையில் கடன் வழங்க ஒப்புதல் வழங்கப்படுகின்றன. பொதுவாக இந்த அளவு 38 சதவீதம் உள்ளதா என வங்கிகள் எதிர்பார்க்கின்றன. அதேவேளையில், 28 சதவீதமாக இருந்தாலும் வங்கிகள் ஏற்றுகொள்கின்றன.

வங்கி கடன் வகைகள்:

கிரெடிட் கார்டு, வாகன கடன், வீட்டு கடன், தனிநபர் கடன், அடமானம் போன்றவை வங்கிக் கடனின் வகைகள் ஆகும். சேமிப்பு கணக்கு மற்றும் பல்வேறு பணம் ஈட்டும் திட்டங்களில் வாடிக்கையாளர்கள் செலுத்தும் பணத்தை வங்கிகள் பிறருக்கு கடன் வழங்கி அதன் மூலம் பெறப்படும் வட்டியின் மூலம் கூடுதல் லாபத்தை ஈட்டுகின்றன. இதற்கு கைமாறாக, வாடிக்கையாளர்கள் செலுத்தும் தொகைக்கு ஏற்ப சிறிய அளவிலான வட்டியை வங்கி அவர்களுக்கு வழங்கும்.

வங்கி கடனில் பாதுகாப்பானவை , பாதுகப்பற்றவை என இரு வகையில் உள்ளன. வாகன கடன், வீட்டு கடன் , நகை கடன் ஆகியவை பாதுகாப்பான கடன் ஆகும். இத்தகைய கடனை பெறுபவர்கள் கடன் தொகையை செலுத்த தவறும்போது, கடனுக்கு இணையான வாகனம், வீடு, நகை போன்றவற்றை ஏலம் விட்டு அதன் மூலம் வங்கிகள் தங்களின் கடன் தொகையை வசூலித்துக்கொள்ளும். கிரெடிக் கார்டு போன்றவற்றை பாதுகாப்பற்ற கடன் என வங்கிகள் கூறுகின்றன. எனவே இத்தகைய கடன்களுக்கு வங்கிகள் கூடுதல் வட்டிகளை வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கின்றன. இதேபோல் கடனை பெற்றுகொள்பவர் குறிப்பிட்ட காலத்திற்குள் கடன் தொகை அல்லது அதற்கான வட்டியை திருப்பி செலுத்த தவறினால் கூடுதல் அபராதங்களும் விதிக்கப்படுகின்றன.

தனி நபர் அல்லது வணிக நிறுவனத்திற்கு அதிகபட்சமாக எவ்வளவு நிதியை கடனாக வழங்கலாம் என்பதை வங்கிகள் முடிவு செய்கின்றன.

தனி நபர் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன் அளவில் அதிக வித்தியாசம் உள்ளன. தனி நபர்களுக்கு அதிகபட்சமாக குறிப்பிட்ட அளவிலான நிதி மட்டுமே கடனாக வழங்கப்படும். அதேவேளையில், வணிக நிறுவனங்களின் தேவை அதிகம் என்பதாக தனி நபர்களை விட வணிக நிறுவனங்களுக்கு கூடுதல் தொகை கடனாக வழங்கப்படுகிறது. வணிக நிறுவனங்களுக்கான கடன் அளவு ஆண்டுதோறும் மாற்றியமைக்கப்படும்.

Scroll to Top