நிலம் வாங்கும்போதோ (அ) விற்கும்போதோ இத்தனை ஆவணங்களைச் சரிபார்க்கணும்

document real estate

 

பொதுவாக மக்களுக்கு நிலம் வாங்கும்போதும், விற்கும்போதும் என்னென்ன ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும், அது தமிழ்நாடு அரசின் எந்தெந்த துறைகளின்கீழ் வருகிறது என்பது போன்ற விவரங்கள் தெரிவதில்லை.

நிலத்தை வாங்கும் போது ஆவணங்களைச் சரிபார்ப்ப து மிகக் கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. அதைப் பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொண்டால் அடிப்படையான விஷயங்களை நாமே ஆவணங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

புல எண் (Survey Number) :

ஒவ்வொரு மாவட்டமும் பல வட்டங்களாகவும் வட்டங்கள் பல கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கும். கிராமங்களின் கீழ் நிலங்கள் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு இலக்கம் இடப்படும். அதற்குப் புல எண் (survey Number) என்று பெயர்.

நிலம் தொடர்பான விவரங்கள் இருதுறைகளில் பராமரிக்கப்படுகின்றன.

** பதிவுத்துறை

** வருவாய்த்துறை

1. பதிவுத்துறை:

நாம் சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப் பத்திரத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் தான் பதிவு செய்ய வேண்டும். மேலும் நீங்கள் வாங்கவிருக்கும் நிலம், விற்பவரின் அனுபவத்தில் இருக்கும் போது அந்த நிலதின் உரிமை யாளர் யார்? எத்தனை பேர் மற்றும் அந்த நிலம் அட மானத்தில் உள்ளதா? அல்லது அந்த நிலத்தின் மீது வழக்கு எதாவது நடந்து வுருகிறதா?  என்பன போன்ற கேள்விகளுக்கு பத்திர பதிவு அலுவலகத்தில் வில்லங்க சான்று கேட்டு மனு செய்து அதில் வில்லங்கங்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்

2. வருவாய்த்துறை:

இந்த துறையில்தான் நிலத்திற்கான விவரங்கள் கீழ்க் கண்ட பதிவேட்டில் இருக்கும்.

பட்டா (Patta)

சிட்டா (Chitta)

அடங்கல் (Adangal)

அ’ பதிவேடு (‘A’ Register)

நிலத்திற்கான வரைபட எல்லை (FMB)

பட்டா

நிலத்தின் உரிமை, நமக்குத்தான் இருக்கிறது என்பதற் கான ஆதாரம் பட்டாவாகும். பட்டாவை வைத்துதான் ஒரு நிலத்தின் உரிமை, யாருக்கு என்பதை முடிவு செய்யப்படுகின்றது. பின்வரும் விவரங்கள் பட்டாவில் இருக்கும்.

1. மாவட்டத்தின் பெயர், வட்டத்தின் பெயர் மற்றும் கிராமத்தின் பெயர்
2. பட்டா எண்
3. உரிமையாளர் பெயர்
4. புல எண்ணும் உட்பிரிவும் (Survey Number and Sub division)
5. நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா
6. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை

சிட்டா

ஒரு தனி நபருக்குக் குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடு. இதில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட் டா எண்கள், நிலம் நன்செய் அல்லது புன்செய் பயன் பாடு, தீர்வை கட்டிய விவரங்கள் எல்லாம் இருக்கும்.

அடங்கல்

ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு. இதில் குறிப்பிட்ட சர்வே எண்ணு க்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்பன போன்ற விவர ங்கள் இதில் இருக்கும்.

அ’ பதிவேடு

இப்பதிவேட்டில் பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், ரயத்துவாரி (ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ), நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு, பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர், நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை,போன்ற விவரங்க ள் இருக்கும்.

நிலத்திற்கான வரைபட எல்லை

நிலத்திற்கான வரைபடம். இது இடம் எவ்வாறு பல பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.

கிரையப் பத்திரம்

சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்த க் கிரயப் பத்திரத்தைச் சார் பதிவாளர் அலுவலகத்தில் (Sub Registration office) பதிவு செய்ய வேண்டும். கிரை யப் பத்திரத்தில் கீழ்க்கண்ட முக்கியமான விவரங்கள் இருக்கும்.

1. எழுதிக் கொடுப்பவரின் பெயர், முகவரி
2. எழுதி வாங்குபவரின் பெயர், முகவரி
3. எவ்வளவு அளவு
4. எவ்வளவு தொகைக்கு விற்கப்படுகிறது
5. சொத்து விவரம்

சொத்து விவரத்தில் நாம் வாங்கும் நிலத்தின் அளவு, அது எந்தப் புல எண்ணில் அமைந்திருக்கிறது, பட்டா எண், அது எந்தக் கிராமத்தில் இருக்கிறது மற்றும் வட் டம், மாவட்டம் பற்றிய விவரங்கள் இருக்கும். நிலம் வீட்டு மனையாக இருந்தால் அதனுடைய அங்கீகாரம் பெற்ற விவரங்கள் மற்றும் பிளாட் எண் முதலியவை இருக்கும்.

கிரையப் பத்திர முதல் தாளின் பின் பக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட முழு விவரங்கள் இருக்கும்.

Scroll to Top