Types of loans in tamil – கடன் வகைகள்
வங்கிகளும் தனியார் நிதி நிறுவனங்களும் தரும் கடன்களும் பல விதங்களில் உள்ளன.
1. தனிநபர் கடன் (Personal Loan).
2. சொத்து அடமானம் ஏதும் இல்லாத வியாபார கடன் (Unsecured Business Loan).
3. வீடு வாங்க, கட்ட, புதுப்பிக்க கடன் (Home Loan).
4. சொத்து அடமானம் மீதான கடன் (Loan Against Property).
5. இருசக்கர வாகனம் வாங்க கடன் (Two Wheeler Loan).
6. கார் வாங்க மற்றும் பழைய காரின் மீதான கடன் (Car Loan).
7. வர்த்தக வாகனம் வாங்க மற்றும் பழைய வாகனத்தின் மீதான கடன் (Commercial Vehicle, Construction Equipment, Tractor Loan).
8. தங்க நகைக் கடன் (Gold Loan).
9. கல்விக் கடன் (Education Loan).
10. கடன் அட்டை (Credit Card).
11. தொழிற்சாலை இயந்திரங்கள் வாங்க மற்றும் பழைய இயந்திரங்களின் மீதான கடன் (Machinery Loan).
12. நிர்வாகத்தின் அன்றாட செலவுகளுக்கான கடன் (Working Capital Loan).
13. சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் (SME Loans).
கடன்கள் பல வகை…
தனிநபர்கள் பொருள்களை வாங்கவும் தனிப்பட்ட சில செலவுகளை மேற்கொள்வதற்கும் தரப்படும் கடன்கள் சில்லறைக் கடன்கள் (Retail Loans) என்று அழைக்கப்படுகின்றன. பெரும் தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் ரூ.10 கோடி முதல் ரூ.1,000 கோடி வரை கடன் தரும். இந்த வகையான கடன்கள் தொழில் கடன்கள் (Industrial loans / Corporate Loans) என்று சொல்லப்படுகின்றன.
இதேபோல, பெரும் எண்ணிக்கையில் அடுக்குமாடி வீடுகளைக் கட்டுவது, பாலம் கட்டுவது, பெரிய அளவிலான கட்டடங்களைக் கட்டுவது என உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் கடன்கள் உள்கட்டமைப்புக் கடன் (Infrastructure Loans) என்று அழைக்கப்படுகிறது. வீட்டுக் கடன் தருவதற்கு மட்டுமே பிரத்யேக வீட்டுக் கடன் வசதி நிறுவனங்களும் (Housing Finance Companies) இருக்கின்றன.