உங்கள் சொத்தை வைத்து கொண்டு சும்மா இருக்கிறீர்களா?

உங்கள் சொத்தை வைத்து கொண்டு சும்மா இருக்கிறீர்களா?

உங்கள் சொத்தை வைத்து கொண்டு சும்மா இருக்கிறீர்களா? சொத்து உங்களை சும்மா விடாது!

பெரும்பாலும் சொத்துக்களை வாங்கி மட்டும் போடுவது அல்லது பூர்வீகச் சொத்துக்களை கவனிக்காமல் அப்படியே போட்டு விடுவது என்று பலர் இருக்கின்றனர். அதனால் அவர்களுக்கு பல விதமான சிக்கல்கள் எழும்பி அவர்களுடைய நேரத்தையும் பணத்தையும் கரைத்து பதங்குலைந்து கொண்டு இருக்கின்றார்கள்.
என் அனுபவத்தில் நான் கண்ட சில விஷயங்களை எழுதுவதன் மூலம் சொத்துக்களை சும்மாவைத்து இருக்ககூடாது என்ற விழிப்பு உங்களுக்கு வரகூடும்.

ஒரு நபர் சென்னைக்கு அருகில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி விட்டார். அதற்கு பட்டாவும் வாங்கிவிட்டார். அந்த சொத்திற்கு வேலியும் போட்டு விட்டார். மேலும் அடிக்கடி சொத்தை நேரடியாக பார்த்து விட்டும் வந்து விடுவார். இப்படி இருக்கின்ற இவருக்கு என்ன பிரச்சனை வரபோகுது என்று நினைக்கிறீர்களா?
அரசு எந்திரம் சமீபத்தில் கம்ப்யூட்டரில் இருக்கிற பட்டாவை எல்லாம் ஆன்லைனுக்கு மாற்றியது. அப்படி இவரின் பட்டாவை ஆன்லைனுக்கு மாற்றிய போது, அது வேறு நபர் பெயருக்கு மாறி விட்டது. பட்டாவில் புதிதாய் பெயர் வந்த நபர் மேற்படி பட்டாவை தன்னுடன் ஏற்கெனவே இருக்கும் பழைய சொத்துக்களின் பட்டா எண்களோடு சேர்த்து புதிதாய் விவசாய கடனும் வாங்கி விட்டார். மேற்படி சொத்தில் ஆன்லைன் EC-யிலும் புதிய நபரின் பெயர் வந்து விட்டது.

அந்த நில உரிமையாளர் என்னிடம் ஒரு வேலை விசயமாக வந்த பொழுது நான் ஆன்லைன் பட்டாவையும் ணிசி-யையும் சோதித்து பார்த்த போது தான் மேற்படி வில்லங்கம் தெரிய வந்தது. அவரிடம் இதனை சொன்ன பொழுது அவர் மிகவும் பதறி போனார். இப்பொழுது அதனை சரி செய்ய வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நடையாய் நடந்து கொண்டு இருக்கிறார். எனவே அடிக்கடி ஆன்லைன் ஆவணங்களையும் சோதித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இது திருப்பூர் மாவட்டத்தில் நமது நண்பர் ஒரு இடத்தை வாங்கி போட்டு, பட்டா பெயர் மாற்றி அதற்கு வேலிகளும் போட்டு வைத்து விட்டார். இவருடைய சர்வே நம்பர் 17, அதே கிராமத்தில் ஒரு இடத்திற்கு வேறு ஒரு நபர் அடமான கடன் கொடுத்து அந்த பணம் திரும்ப வராததால் நீதி மன்றத்தில் வழக்காக போட்டு அந்த வழக்கு விவரங்களை சார்ப திவகணிசி-ல்பதிய வைப்பதற்கான வேலைகளை செய்தார்.

அப்பொழுது டாகுமென்ட் ரைட்டர் அடமான கடனின் சர்வே எண் 71 ஆனால் தவறுதலாக 17 என்று டைப் அடித்து விட்டார். மேற்படி தவறான சர்வே எண் 17 EC-ல் ஏறி விட்டது. ஆனால் உண்மையான சர்வே எண் 17 காரர் நிம்மதியாக தூங்கி கொண்டு இருந்தார். இரண்டு வருடமாக இதனை பார்க்கவில்லை!
நான் மேற்படி சர்வே எண் 17 காரரை சந்தித்து பேசும் போது வருடத்துக்கு ஒரு முறையாவது EC போட்டு பாருங்கள் என்று சாதரணமாக சொன்னேன். அவரும் EC போட்டு பார்த்தார். மேற்படி சொத்தில் புதிய அடமான நீதி மன்றவழக்கை பற்றிய என்ட் ரிEC-ல் வந்திருந்தது. இப்பொழுது அதனை சரிசெய்ய சார்பதிவகத்திற்கு நடையாய் நடந்து கொண்டு இருக்கிறார். எனவே 6 மாதத்திற்கு ஒரு முறையாவது EC போட்டு பார்க்க வேண்டும்.
அடுத்ததாக கோயம்புத்தூர் தெலுங்கு பாளையத்தில் ஒருவருடைய பூர்வீக சொத்து அது ஒரு பழைய வீடு வீட்டிற்கு தேவையான பட்டா, வரி, மின்சாரம் எல்லாம் அவர்கள் பெயரில் தான் இருக்கிறது. அதனை யெல்லாம் பராமரிக்க பக்கத்து வீட்டுக்காரான உறவினரிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள். உரிமையாளர்கள் வருடத்திற்கு ஒரு முறை மட்டும் சென்று பார்த்து வருவார்கள்.

பக்கத்து வீட்டுக்காரர் மேற்படி வீட்டை 11 மாதத்திற்கு குத்தகைக்கு எடுத்தது போல பதிவு செய்யபடாத ஆவணத்தை அவர்களுடைய கையெழுத்தை போட்டு கோர்வையாக தொடர்ந்து பல வருஷங்களுக்கு குத்தகை ஆவணத்தை உருவாக்கி இருக்கிறார். பிறகு நீதி மன்றத்தில் எங்களுக்கு மேற்படி சொத்தை விற்றால் எங்களுக்கு தான் விற்க வேண்டும் என்ற குத்தகை சட்டத்தில் வழக்கு போட்டு இருக்கிறார்கள். அந்த சொத்துகாரர்களும் இன்று நீதிமன்றத்திற்கு நடையாய் நடந்து கொண்டு இருக்கிறார்கள். எனவே உங்களுடைய சொத்துக்களை அடிக்கடி சென்று பார்க்க வேண்டும். வீட்டு வரி, மின்சாரம் என அனைத்தையும் நீங்களே சென்று கட்ட வேண்டும்.
சேலம் – ஆத்தூர்அருகில் ஒரு கிராமத்தில் ஒரு பெரிய கிராமவீ டு இருந்தது. இவர்கள் சேலம் டவுனில் இருக்கிறார்கள். கிராம வீட்டை குறைந்த வாடகைக்கு விட்டு இருக்கிறார்கள் வாடகையை ஆறு மாதத்திற்கு ஒரு முறை மொத்தமாக வாடகைதாரரை கொண்டு வந்து கொடுப்பார்கள்.வீட்டு உரிமையாளர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக அவர்களின் கிராம வீட்டை சென்று பார்க்கவில்லை. ஆனால் வாடகை இருப்பவர் 6 மாதத்திற்கு ஒரு முறைவாடகையை தவறாமல் கொண்டு வந்து உரிமையாளர்களுடைய அலுவலகத்தில் நிதி பொறுப்பில் இருப்பவர்களிடம் கட்டி விடுவார்கள். எனவே உரிமையாளர்களும் வாடகை தொடர்ந்து வருகிறது என்பதனால் அப்படியே இருந்து விட்டார்கள்.

மேற்படி வாடகை இருப்பவருக்கு கிராம வீட்டுக்கு அருகிலேயே ஒரு 15 செண்டு காலி நிலம் ஒரு சந்து வழியுடன் இருக்கிறது. அவர் மேற்படி இடத்தை விற்க முயற்சிக்கிறார் அவரால் விற்க முடியவில்லை! சந்து வழியாக இருக்கிறது என்று வேண்டாம் என்று சிலர் சொல்லிவிட்டார்கள். அதனால் இப்பொழுது வாடகை இருக்கும் வீட்டை காட்டி சந்து வழியில் இருக்கும் பத்திரத்தை வைத்து வேறு நபருக்கு கிரயம் கொடுத்து விட்டார்.
அதாவது பத்திரம் ஒரு இடம், கைப்பற்றல் இடம் வேறு இடம். மேற்படி வீட்டை வாங்கியவர்கள், குடிவந்து விட்டார்கள்.விற்ற நபர் உண்மையான உரிமையாளருக்கு இன்று வரை 6 மாதத்திற் குஒரு முறை வாடகையை கொண்டு சென்று கொடுத்து கொண்டு இருக்கிறார். நான் களப்பணிக்கு சென்ற பிறகு தான் உண்மையான உரிமையாளருக்கு விசயமே தெரிய வந்தது. இப்பொழுது புதியதாக வீடு வாங்கியவர்களை காலி செய்ய சொல்லி நீதி மன்றம் நடந்து கொண்டு இருக்கிறார்கள்.

இப்படிசொத்தையும் நேரடியாக சென்று பார்க்காமல், ஆவணங்களை எல்லாம் அடிக்கடி சோதனையிடாமலும் சொத்தை வைத்துக் கொண்டு சும்மா இருந்தால் சொத்து உங்களை சும்மா இருக்க விடாது.
வெறும் நிலத்தை மட்டும் விலை உயரும் என்று வாங்கி போட்டு வைத்திருக்கும் சொத்துக்களை மாதந் தோறும் வாடகை, விளைச்சல் வருமானம், வியாபார இலாபம் போன்று அந்த சொத்துக்களில் இருந்து தொடர் வருமானம் வருகின்றது போல் சொத்துக்களாக மாற்றும் போது தான் சொத்துக்கள் பாதுகாப்பாகவும், வருமானம் தரகூடியதாகவும் இருக்கும்.

 

– Syed Basheer

Scroll to Top