பத்திரங்களை எங்கெல்லாம் பதியலாம் தெரிந்து கொள்ள வேண்டிய 14 விஷயங்கள்!!

பத்திரங்களை எங்கெல்லாம் பதியலாம்

1)ஒரு கிரய பத்திரதையோ அல்லது வேறு ஏதாவது பத்திரங்களையோ பதிய வேண்டும் என்றால் சொத்து இருக்கும் ஆட்சி எல்லைக்குட்டபட் சார்பதிவகத்தில் பதியலாம் என்பது அனைவருக்கும் தெரியும்அதில் சில விதிவிலக்குகளும் சிறப்பு விசயங்ளும் உள்ளன அவற்றை பார்ப்போம்.

2)இரண்டு வெவ்வேறு கிராம சொத்து, இரண்டும் வேறு வேறு சார்பதிவக ஆட்சி எல்லையில் வருகிறது என்று வைத்து கொள்வோம்.உதாரணமாக செங்கல்பட்டு மாவட்ட திருக்கழுகுன்றம் சார்பதிவக எல்லைக்குள் இருக்கிற வசுவசமுத்திரம் கிராமத்திலும் 2இரண்டு ஏக்கர் நிலமும் மதுராந்தகம் சார்பதிவக எல்லைக்குள் இருக்கிற முருகம்பாக்கம் கிராமத்தில் 3ஏக்கர் நிலமும் ஒருவருக்கு இருக்கிறது என்றால் அதனை அப்படியே இன்னொருவருக்கு விற்கிறார் என்றால்

3)இரண்டு சொத்தையும் ஒரே கிரயபத்திரத்தில் எழுதி அதனை மேற்கண்ட இரண்டு சார்பதிவகத்தில் ஏதாவது ஒன்றில் மதுராந்தகமோ அல்லது திருகழுக்குன்றம் சார்பதிவகத்தில் பதியலாம் இப்படி ஒரு விதி பதிவு துறையில் இருக்கறது.நிறைய சொத்து வைத்து இருப்பவர்கள் சார்பதிவகம் சார்பதிவகமாக அலைய கூடாது என்பதற்காக இந்த விதி இருக்கிறது என்பது என் புரிதல்

4)பொது அதிகார பத்திரம் அதாவது பவர் பத்திரத்தை பொறுத்தவரை தமிழகத்தில் எங்கு வேண்டுமானலும் பதியலாம் என்று பத்தாண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது.அதனால் நிறைய ஆள்மாறட்ட குழப்படிக்கள் சிக்கலகள் வந்தது. (என் மைண்ட் வாயஸ்: எனக்கு தொழில் கற்று கொடுத்தங்க இந்த பவர் பத்திரங்களை பயன்படுத்தி நிறைய சம்பாதிச்சிடாங்கப்பா நீ வியாபரத்தில் நிற்கும் போது கதவெல்லாம் அடைச்சிட்டாங்கப்பா)

5)பவர் மூலமாக மோசடிகளை தவிர்ப்பதற்காக பவர் கொடுப்பவர் வாழ்கின்ற ஆட்சி எல்லையில் இருக்கிற சார்பதிவகத்திலோ அல்லது பவர் கொடுக்கப்படும் சொத்து இருக்கும் ஆட்சிஎல்லைக்குட்பட்ட சார்பதிவகத்திலோ பவர் பத்திரங்களை(பொது அதிகார பத்திரங்களை) பதியலாம்.

6)நீதிமன்றத்தில் சொத்து சம்மந்தமாக ஒரு தீரப்பு வருகிறது அந்த தீர்ப்பு நகலை சார்பதிவகத்தில் பதிய வேண்டும் என்றால் அதனையும் இரண்டு இடத்தில் பதியலாம் ஒன்று அந்த நீதிமன்றம் இருக்கும் ஆட்சி எல்லைக்குள் இருக்கும் சார்பதிவகத்தில் இரண்டு அந்த தீர்ப்பில் இருக்கும் சொத்தில்

7)ஒரு சில வழக்குகளில் சில சொத்து சிக்கல்கள் முடியும் போது மேற்கண்ட இரண்டு சார்பதிவத்திலும் பதிய முடியாத அளவுக்கு களநிலவரம் நெகட்டிவ் எமோஷ்னலாக இருந்தால் அந்த மாவட்ட பதிவாளர் முடிவு படி சார் மாவட்ட எல்கைக்குள் எங்கு வேண்டுமானலும் பதியலாம்.

8)ஆம்புலன்ஸ்,இரயில்வண்டி,விமானம்,நீதிமன்றம் ,ரயில் நிலையம் உட்பட பொது இடங்களில் கூட அவசரமும் தேவையும் கருத்தில் கொண்டு பதியவேண்டும் என்று மாவட்ட பதிவாளர் முடிவு எடுத்தால் பதியலாம்

9)மாவட்ட பதிவாளர் ,சார்பதிவாளர் தன்னுடைய வீட்டில் பதியகூடாது என்று பதிவுசட்டம் சொல்கிறது.ஆனால் எழுதி கொடுப்பவர் வீட்டில்சென்று பதிவு பணியை செய்யலாம் என்று சட்டம்சொல்கிறது

10)பத்திரபதிவை வீட்டில் நடத்துவதற்கு எழுத்து மூலமாக சார்பதிவாளரிடம் விண்ணபிக்க வேண்டும் யார் பயனாளியோ அவர் வந்து சார்பதிவாளரை சந்தித்து விண்ணபிக்க வேண்டும் பெரும்பாலும் நோயாளி உடல் பலவீனமானவர்கள் கலாச்சாரபடி வெளியே வர விரும்பாதவர்கள் வீட்டு கைதில் வீட்டு காவலில இருப்பவர்களுக்கு சார்பதிவாளர் வீட்டிற்கு வந்து பதிய ஒத்து கொள்வார்.

11)உயர்பதவினர் அரசால்சிறப்ப விலக்கு அளிக்கபட்டவர்கள் பட்டியலில் உள்ளவர்களுக்கு அவர்கள் வீட்டிற்கு சென்று பதிவு பணி செய்யலாம் என்று சட்டம் சொல்கிறது.

12)உயிலை இந்தியா முழுவதும் உள்ள எந்த சார்பதிவகத்தில் பதியலாம்.

13)ஒரு மாவட்ட பதிவாளர் விரும்பினால் அவர் எல்லைக்குட்பட்ட எந்ந சார்பதிவகத்திலும் பதிய உத்தரவிட முடியும்.

14)தமிழ்நாட்டு சொத்துக்களை வெளிமாநிலத்தில் பதிவது செல்லாது.கேரளா பார்டரில் இருக்கும் தமிழ்நாட்டு சொத்துக்கிளுக்கு கேரளாவில் பதியபட்டு இருக்கிறது கேரளா பத்திரம் என்று நாங்கள சொல்வோம் அதெல்லாம் இப்பொழுது செல்லாது.

பதிவதற்கு இவ்வளவு இடங்கள் இருந்தாலும் அந்த அந்த சொத்து இலுக்கும் சார்பதிவகத்தில் பதிவது தான் சிறப்பானதாகும்.

சொத்துக்கள் சேரட்டும்!ஐஸ்வர்யம் பெருகட்டும்!!

Scroll to Top