அடுக்குமாடி வீடு வாங்க போறீங்களா? இந்த விஷயங்களை தவறாமல் கவனத்தில் வையுங்கள்…

 

flat sale in chennai

அடுக்குமாடி வீடு வாங்குபவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டிய விஷயங்கள்…

சென்னை போன்ற பெருநகரங்களில் தனியாக மனை வாங்கி, வீடு கட்டு வது என்பதெல்லாம கொஞ்சம் கஷ்டம் தான். இவர்களின் விருப்பத்தேர்வு, அடுக்கு மாடி வீடுகள் எனப்படும் ஃப்ளாட்தான்.

அடுக்கு மாடி வீடுதான் என முடிவு செய்துவிட்டால், பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பல ஆவணங்களை ஆராயவேண்டும்.

மனை மூலப் பத்திரத்தின் ஒரிஜினல் யார் பெயரில் இருந்தது, ஒரிஜினல் பெயரிலிருந்து யார் பெயருக்குச் சொத்து மாறியது, கட்டிடம் யார் கட்டிக்கொடுத்தது, லே-அவுட் மற்றும் பிளான் அப்ரூவல் வாங்கியிருக்கிறார்களா, ஆகிய கேள்விகளை எழுப்பி அதற்கான விடைகளைத் தேடி அடைய வேண்டும்.

மின்கட்டண இணைப்பு, குடிநீர் இணைப்பு யார்பெயரில் இருக்கிறது, நீங்கள் வீடு வாங்கும்போது கட்டணங்கள் எதுவும் நிலுவையில் உள்ளனவா என்பதை கவனியுங்கள். அதை உங்கள் பெயரி ல் மாற்றிக் கொள்ளவும் வீடு வாங்கும்போதே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டால் பிறகு பில்டர் அவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்விடுவார். பின்னர் அலைச்சல் தான் மிச்சமாகும்.

அடுக்குமாடி வீட்டில் பிரிக்கப்படாத மனை என்றழைக்கப்படும் யு.டி.எஸ். மனை சரியாகப் பிரிக்கப்பட்டிருக்கிறதா, என்பதை பொறியாளர்களைக்கொண்டு மதிப்பீடுசெய்வதே நல்லது. பில்டர் சொல்வதைக்கேட்டு அப்படியே விட்டுவிட் டால், 20, 25 ஆண்டுகள் கழித்து அடுக்குமாடியை வேறொ ருவரிடம் விற்க எல்லா ப்ளாட் உரிமையாளர்கள் முடிவு செய்வதாக வைத்துக்கொள்வோம்.

அப்போது உங்கள் யுடிஎஸ். வித்தியாசம் இருந்தால் அது உங்களுக்குத்தான் இழப்பை ஏற்படுத்திவிடும். பில்டர் சொல்வதை அப்படி யே கேட்காமல் அதை அளந்து பார்ப்பதையும் மனதில் போட்டுக்கொள்வது நல்லது.

அடுக்குமாடி வீட்டில் அனைத்துத் தளங்களுக்கும் கட்டிட அனுமதி பெறப் பட்டிருக்கிறதா என ஆவணங்களைச் சரிபார்த்து உறுதி ப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் சில சமய ங்கள் 2 (அல்) 3மாடி வீடு கட்ட அனுமதி வாங்கியிருப் பார்கள். ஆனால், கூடுதலாக ஒரு மாடியைக் கட்டிவிடுவார்கள்.

வரைபடங்களில் அது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். எத்தனை வீடுகள் ஃப்ளாட்டில் உள்ளன என்று பாருங்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் நிச்சயம் ஒரு சமையல றைதான் இருக்கும். அதை எண்ணிப் பார்ப்பது போன்ற விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.

மனை அல்லது அடுக்கு மாடிக் குடியிருப்பு எதுவாக இருந்தாலும் அந்தச் சொத்தை வாங்குவதற்குமுன்பாக அந்தச்சொத்து சம்பந்தப்ப ட்ட எல்லா ஆவணங்களின் அசல் பத்திரங்கள், விற்பவரிடம் இருக்கின்றனவா என பார்க்கவேண்டும்.

சிலர் அசல் பத்திரத் தை வங்கியில் அடமானம் வைத்துக் கடன் வாங்கி இருப்பார்க ள். ஆனால், பத்திரப்பதிவு அலுவலகத்தில் டூப்ளிகேட் பத்திரம் வாங்கி விற்பனை செய்வார்கள். எனவே அசல் பத்திரத்தைக் கண்ணால் பார்த்தபிறகு முடிவு எடுங்கள்.

அசல்பத்திரம் தொலைந்துவிட்டது என கூறினால் அது தொடர்பாக போலீசில் கொடுத்த புகார், அப் புகார் எண் ஆகியவற்றைக் கேட்டு பாருங்கள். பத்திரப்பதிவு அலுவலகத்தில் என்ன காரணம் சொல்லி டூப்ளிகேட் பத் திரம் வாங்கப்பட்டிருக்கிறது என்பதையும் ஆராயுங்கள்.

ஒருவர் தன் பெயரில் உள்ள சொத்தை விற்பனை செய்ய இன்னொருவருக்கு அதிகாரம் கொடுப்பதே ‘பவர் ஆஃப் அட்டர்னி’. அதிகாரம் வைத்திருக்கும் நபரிடமிருந்து ஒரு சொத்தை வாங்கும்போது, அந்த அதிகாரம் இன்னும் செய ல்பாட்டில் இருக்கிறதா? அதிகாரம் கொடுத்தவர் உயிருடன் இருக்கிறரா? இல்லையா என்பதை கவனிக்கத் தவறாதீர்கள்.

சிலநேரங்களில் அதிகாரம் கொடுத்தவர் அதை ரத்து செய்திருக்கலாம். அதை மறைத்து சொத்தை விற்க முயல்வார்கள். அச்சொத்தில் கட்டப்பட்டு வாங்கப்படும் அடுக்குமாடிவீடுகளுக்கு பின்னர் சிக்கல்கள் வர வாய்ப்பு உண்டு.

இதுபோன்ற பித்த லாட்டத்தைத் தவிர்க்க தற்போது அதிகாரம் ரத்தானால் அந்த விவரம் அசல் அதிகாரப் பத் திரத்தின் பின்புறத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதை ஆராய்வது அவசி யம்.

அடுக்குமாடி கட்டி முடிக்கப்பட்டதற்குக் கட்டுமான நிறைவுச் சான்றிதழை பில்டர் வாங்கி வைத்திருக்கிறாரா என்பதை யும் கேட்டு வாங்க வேண்டும். சில இடங்களில் பில்டர்கள் கட்டுமானச் சான்றிதழ் வாங்கித் தராமல் விட்டுவிடுவார்கள். வீடு வாங்குபவர்களும்கேட்காமல் விட்டுவிடுவார்கள்.

ஒரு பில் டர் கட்டுமான நிறைவு சான்றிதழ் வாங்கித் தரவில்லை என்றால், கட்டிய வீட்டில் விதிமுறைமீறல் இருக்கலாம் என்று அர்த்தம் கொள்வது கட்டுமானத்துறையில் வழக்கம். எனவே கட்டுமான நிறைவுச் சான்றிதழ் மட்டுமல்ல, ஒவ்வொரு நிலையில் கட்டிடம் கட்டி முடித்ததற்கும் நிறைவுச் சான்றிதழ் வாங்க ப்பட்டிருக்கிறதா என்பதையும் கவனிக்கத் தவற வேண்டாம்.

Scroll to Top