சட்டப்படி திருடுவது எப்படி?

“சட்டப்படி” கடனா…. எப்படி?
ஊருக்கு  வெகு தூரத்தில் உள்ள ஒரு இடத்தில் 100 ஏக்கர் பூமி வாங்குவார்கள். அந்த பூமி வறண்டு காய்ந்து போய் இருக்கும். சும்மா கொடுத்தால் கூட யோசிப்பார்கள். இத்தகைய இடங்களில் ஏக்கர் ஒரு லட்சம் என வாங்கி விடுவார்கள். 100 ஏக்கரும் சேர்ந்து மொத்தம் ஒரு கோடிதான்.
பின்னர் அதன் ஒரு பகுதியில் ஒரு ஏக்கரை தங்களது உறவினர் பெயரில் ஏக்கர் 50 லட்சம் என பல மடங்கு அதிக விலைக்கு விற்று அதன் விற்பனை விலையான 50 லட்சத்துக்கே முத்திரைத்தாள் வாங்கி பதிவு செய்துவிடுவார்கள்.  இனி அந்த பகுதியில் ஏக்கர் 50 லட்சம் என்பது தான் அரசு வழிகாட்டி மதிப்பீடு ஆகிவிடும்.
பத்திரப்பதிவு அலுவலக முத்திரைத்தாள் விதிகளின்படி குறைத்துதான் மதிப்பீடு செய்யக்கூடாது, அரசுக்கு அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பு இருப்பதால் அதிகமாக மதிப்பீடு செய்ய தடையில்லை.
100 ஏக்கர் பூமியின் சர்வே எண்ணிலேயே விற்பனை செய்யப்பட்ட இந்த ஒரு ஏக்கர் பூமியும் வருவதால் மீதி 99 ஏக்கர் விலையும் இனிமேல் ஏக்கர் 50 லட்சம்தான்.
அதாவது “சட்டப்படி” இந்த 99 ஏக்கர் பூமியின் வழிகாட்டு மதிப்பீடு 49 கோடி 50 லட்சம்.
இதன் அடிப்படையில் வங்கியில் கடன் கேட்டால் ஒரு கோடி மதிப்பு பூமிக்கு “சட்டப்படி” சுமார் 15 -20 கோடி ரூபாய் கடன் கிடைக்கும்.
பின்னர் “கட்ட முடியாத சூழ்நிலை” ஏற்பட்டால் கடன் வாங்கியவர்க்கு ஒரு பிரச்சனையும் இல்லை. ஒரு கோடி தான் நட்டம் மீதி 14 கோடி லாபம் தான்.
இந்த பூமியை வங்கி ஏலத்தில் விற்க போனால் மொத்த பூமியும் சேர்த்து வாங்கிய ஒரு கோடி விலை சொன்னாலும் வாங்க ஆள் வர மாட்டார்கள்.
அந்த நிறுவனத்தின் இதர சொத்துக்களும் “சட்டப்படி” இந்த நிலையில்தான் இருக்கும். எனவே கடனை மீட்க முடியாமல் போய்விடும். இதுதான் வராக்கடன்.
எல்லாமே ஆவணங்களின்படி சட்டப்படி சரியா இருக்கும். எனவே யாரையும் குற்றம்சாட்ட முடியாது.
நிலத்தை பார்வையிட செல்லும் உயர் அதிகாரிகளுக்கும் தெரியும் இந்த இடத்தில் இந்த விலை இல்லை என்று.
இருந்தும் சட்டப்படி அரசின் வழிகாட்டி மதிப்புதான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
அப்புறம் என்ன Write Off தள்ளி வைப்புதான். இது போன்ற அர்த்தமற்ற இயந்திரத்தனமான கடன் வழங்கும்  செயல்பாடுகளை திருத்தி அமைத்தால் வராக்கடன் என்பது இருக்காது.
ஒரு writeoff கதை சொல்லட்டா சார்.
ஒரு படத்தில் பொன்னம்பலம், “முதல்ல வாங்கோணும்… அப்புறம் தோண்டோணும்…” என்று சொல்வார். அப்படித்தான், கடனை writeoff செய்வது என்பது waiveoff செய்வதற்கு முதல்படி.
அதிலும் பலகோடிகளில் கடன் வாங்கியவர்களை நிதானமாக வேறுவேறு நாடுகளுக்கு தப்பிக்க விட்டுவிட்டு, அங்கே நன்றாக செட்டில் ஆகவிட்டுவிட்டு பிறகு பொறுமையாக இந்த processஐ துவக்குவது இன்னும் அயோக்கியத்தனம்.
Writeoff செய்தபின் அந்தப் பிரச்சினை NCLT (National Companies Law Tribunal)க்கு போகும். அதில், சொத்துக்களை ஏலம் விடுவார்கள். எப்போதுமே கொடுக்க வேண்டிய கடனுக்கு நிகராக சொத்துகள் இருக்காது.
உதாரணத்துக்கு ஒரு கம்பனியின் 55 கோடி கடன்  writeoff செய்யப்பட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள். பின் NCLT அந்தக் கம்பனியின் சொத்துக்களை ஏலம்விடும். அதில்வரும் தொகையை வாங்கிக்கொண்டு கடன் முடிந்ததாக வங்கிகள் அறிவிக்கும். சொத்து 5கோடிக்கு ஏலம் போனாலே மிகப்பெரிய விஷயம்.  மிச்சம் 50 கோடி waiveoff, அதாவது தள்ளுபடி செய்யப்படும். மக்கள் பணத்துக்கு நாமம்.
இதிலும் ஆயிரம் தில்லுமுல்லுகள் நடக்கும்.  பலதடவை சொத்துகள் ஏலமே போகாது. மல்லய்யாவின் சொத்துகள் அப்படித்தான் கிடக்கிறது. ஏனெனில் கடனில் இருப்பவை பெரும்பாலும் மதிப்பில்லாத சொத்துகளாக இருக்கும்.
அதனால்தான் writeoffக்கும் waiveoffக்கும் பெரிய வித்தியாசமில்லை என்கிறோம்.
வங்கிகளில் பெர்சனல் லோன் வாங்கி கட்ட முடியாமல் தவிக்கும் நடுத்தர மக்களை அன்றாடம் பத்து முறை ஃபோனில் அழைத்தும், வீட்டுக்கு நேரில் வந்தும் டார்ச்சர் கொடுப்பார்களே வங்கிக்காரர்கள், அதெல்லாம் பெரும்பணக்காரர்களிடம் நடக்காது.  டிராஃபிக் போலீஸ் நம்மை நிப்பாட்டி, “ஃபைன் என்றால் 500ரூ. என்னிடம் கொடுப்பதாக இருந்தால் 100ரூ தான். என்ன பண்ணலாம்?” எனக் கேட்டு பேரத்தை முடிப்பார்களே அப்படித்தான் பெரும்பணக்காரர்களின் கடன்கள். அதிலும் மத்திய அரசு இதில் எக்ஸ்பர்ட். இல்லையென்றால் 50ஆண்டுகளாக சீனில் இருக்கும் காங்கிரசைவிட பாஜக பணக்கார கட்சி ஆகமுடியுமா என்ன?
வாங்கும் சொற்ப சம்பளத்தில் வரியையும் கட்டிவிட்டு, வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் GSTயும் கட்டிவிட்டு பின் கொரானா காலத்தில் Pmcaresக்கும் படியளக்கிறோமே.. அதெல்லாம் எதற்கு தெரியுமா? லைலா ஒரு மாமியைப் பார்த்து வெறியாய் கத்துவாரே… “ம்ம்ம்…. நீ கக்கூஸ் போனதுக்குடீ” என்று.  அப்படி நீரவ் மோடியும், மல்லய்யாவும் வெளிநாடுகளில் கக்கூஸ் போவதற்குதான்.
அதனால் writeoff வேறு waiveoff வேறு என்றெல்லாம் எங்களுக்கு பொருளாதார வகுப்பெடுக்காதீர்கள். டீமானடைசேஷன் பண்ணால் கருப்பு பணம் ஒழியும், கள்ளப்பணம் ஒழியும், நாட்டில் தேனும் பாலும் ஓடும் என நம்பிய மக்கு பசங்க தான நீங்க? அப்படி பின்னாடி போய் பெஞ்சு மேல நில்லுங்க..
படித்ததில் பிடிக்காதது…..
Scroll to Top